"தி.மு.க.வின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது" - ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்

"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்ததவர், அன்புமணி" - திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாக்குசேகரித்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர்,  நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது என்றார். இதேபோல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததவர் அன்புமணி ராமதாஸ் என்றும், அந்த திட்டத்தை கருணாநிதி உரிமை கொண்டாடினார் என்றும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்