மக்களவைத் தொகுதி - வேட்பாளர் இறுதிப் பட்டியல்

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
x
தமிழகத்தில் 39  மக்களவை தொகுதிகளுக்கு ஆயிரத்து 576 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், 845 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.இதில்  தேசிய கட்சிகள் சார்பில் 57 பேரும்,  மாநில கட்சிகள் சார்பில் 55 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் 174 பேரும்,  சுயேச்சை வேட்பாளர்களாக 559 பேரும்  களத்தில் உள்ளனர். இவர்களில் 779 ஆண் வேட்பாளர்கள், 65 பேர் பெண் வேட்பாளர்கள்  திருநங்கை  ஒருவரும் களத்தில் உள்ளார்.

அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் மக்களவை தொகுதி கரூர். அங்கு 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  குறைந்த வேட்பாளர்கள் போட்டிடும் தொகுதி  நீலகிரி. அங்கு10 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.  தென் சென்னையில் தொகுதியில் ஒரு திருநங்கை போட்டியிடுகிறார். 18  தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 514 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில்,  269 பேர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.   இதில் மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும்,  பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேட்சையாக187 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களில் 241 பேர் ஆண் வேட்பாளர்களும், 28 பேர் பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.


அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதியாக  பெரம்பூர் உள்ளது. அங்கு 40 வேட்பாளர்களும்,  குறைந்த வேட்பாளர்கள் போட்டிடும் தொகுதியாக குடியாத்தம் உள்ளது. அங்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பட்டியலில் பெண்கள் போட்டியிடாத மக்களவை தொகுதிகளாக திருவண்ணாமலை., நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகியவை உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளைப் பொறுத்தவரை பாப்பிரெட்டிபட்டி, கரூர், தஞ்சை, சாத்தூர் தொகுதிகள் பெண்கள் போட்டியிடாத  தொகுதிகளாக உள்ளன

Next Story

மேலும் செய்திகள்