பொன்.ராதாகிருஷ்ணன் சொத்து மதிப்பு அதிகரிப்பு

ரூ.3 கோடி அதிகம் என வேட்பு மனுவில் தகவல்
பொன்.ராதாகிருஷ்ணன் சொத்து மதிப்பு அதிகரிப்பு
x
கன்னியாகுமரி நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.இராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு  கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 3 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அவரது மொத்த சொத்து மதிப்பு  சுமார் நான்கரை கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பொ.ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ஏழரை கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்