காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நள்ளிரவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
* திருவள்ளூர் தனி தொகுதியில் ஜெயகுமார், கிருஷ்ணகிரி  செல்லக்குமார், ஆரணியில் விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

* திருச்சியில் திருநாவுக்கரசரும், தேனியில் இ.வி.கே.எஸ். இளங்கோவனும், கரூரில் ஜோதிமணியும் களம்காண்கின்றனர்.

* விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எச். வசந்தகுமார் மற்றும் புதுச்சேரியில் வைத்தியலிங்கம் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். 

* இதனிடையே, 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த காங்கிரஸ், சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை.

* டெல்லியில் ராகுல், சோனியா, கே.எஸ். அழகிரி ஆகியோர் பங்கேற்ற கூட்டத்துக்கு பிறகு இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்