பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் : பா.ஜ.க.வில் சேரும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்

கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் : பா.ஜ.க.வில் சேரும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்
x
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க.மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் கவரப்பட்டு, பா.ஜ.க.வில் தம்மை இணைத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.பா.ஜ.க.வில் தம்மை இணைத்துக் கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பை, மிகப் பெரிய மரியாதையாக கருதுவதாகவும் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவரை அவர் சந்தித்தார். காம்பீருக்கு பா.ஜ.க. சால்வையை, அமித்ஷா அணிவித்து கட்சிக்கு பணியாற்ற வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்