வேட்பாளர் அறிவிப்புக்கு அவகாசம் உள்ளது - திருநாவுக்கரசர்

வேட்பாளர் பட்டியல் அறிவிக்க அவகாசம் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று  தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்க அவகாசம் உள்ளதாக  தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வரும் 26 ஆம் தேதி வரை மனுத் தாக்கல் செய்ய அவகாசம் உள்ளதால், காங்கிரஸ் தலைமை விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்