ராஜகண்ணப்பன் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல்...

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தமது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல்.
x
அ.தி.மு.க. வில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்,  முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தமது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். பின்னர்  மக்கள் தமிழ்தேசம் என்ற கட்சியை துவங்கி 2001 தேர்தலில் ராஜகண்ணப்பன் திமுக கூட்டணியில் இணைந்தார்.  கண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இளையாங்குடி தொகுதியில்  அவரே களமிறங்கி போட்டியிட்டார். பின்னர் அவர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்