விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை சென்னை - சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
x
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை சென்னை - சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக அமைச்சர்கள் உடன் இருந்தனர். உடல் நலக்குறைவு காரணமாக, விஜயகாந்த், தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, விஜயகாந்திடம் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு, தேர்தல் பிரசாரம், வெற்றிக்கான வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த்தை இல்லம் தேடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்று சந்தித்தது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்