7 கட்டங்களாக மக்களவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

17 வது மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
x
* ஏப்ரல் 11 ஆம் தேதி, முதல் கட்டமாக தொடங்கும் தேர்தல், ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் முறையே 2, 3, 4 கட்டமாக  நடைபெறுகின்றது .  

* தொடர்ந்து 5, 6, 7 ஆம் கட்ட தேர்தல்கள் முறையே மே மாதம் 6, 12, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

*  ​மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், அரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், அந்தமான், தாதர் & நாகர் காவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு, புதுடெல்லி, புதுச்சேரி, சண்டிகார் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

* 18 முதல் 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் ஒன்றரைகோடி பேர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்