திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு

நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான தேதி, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு
x
நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான தேதி, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனு தாக்கல் செய்வற்கான அவகாசம், மார்ச் தேதி 7ம் தேதியில் இருந்து 8 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இதனிடையே, திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட  ஜெகத்ரட்சகனும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் வடசென்னை தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும் விருப்பமனு தாக்கல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்