பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

சென்னை கிளாம்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை
x
சென்னை கிளாம்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக நாளை அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டணி  கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்க உள்ளதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்