தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? - கனிமொழி விருப்பமனு தாக்கல்

திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில், இன்று அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த அவர் , தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நேற்று நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்