அபிநந்தனை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை..? - ஹெச் ராஜா பதில்

அபிநந்தனை பார்த்து இந்திய இளைஞர்கள் துணிச்சல், வீரம் ,தேசபக்தி ஆகியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக துவங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, துவக்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அபிநந்தனை பார்த்து இந்திய இளைஞர்கள் துணிச்சல், வீரம் ,தேசபக்தி ஆகியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்