அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் கடிதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.
x
ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, அதி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இணைந்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அ.தி.மு.கவின் அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், ஏழை, எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு, தமிழ் இன எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அ.தி.மு.க தனது அரசியல் பயணத்தைத் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தனது பாதையையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு அ.தி.மு.க நிற்பதாக பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றியை ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிக்க உறுதி பூண வேண்டும் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்