பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...
x
ஒடிசா மாநிலத்தின் முதுபெரும் தலைவரான பிஜூ பட்நாயகின் மகன் நவீன் பட்நாயக், ஜனதா தள கட்சியில் இருந்து, 1997இல் வெளியேறி, பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 9 இடங்களில் வென்று, வாஜ்பாய் அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சரானார் நவீன் பட்நாயக். 1999 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 10 இடங்களில் வென்று, வாஜ்பாய் அமைச்சரவையில் மீண்டும் சுரங்கத் துறை அமைச்சரானார் நவீன் பட்நாயக். 2000ஆம் ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, 84 தொகுதிகளில் போட்டியிட்டு, 29.40 சதவீத வாக்குகள் பெற்று, 68 இடங்களில் வென்றது. அப்போது நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வராக பதவி ஏற்றார். 2004 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, 27.36 சதவீத வாக்குகள் பெற்று, 61 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2009 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து, 38.86 சதவீத வாக்குகள் பெற்று, 103 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து, 18 இடங்களில் போட்டியிட்டு, 37.24 சதவீத வாக்குகள் பெற்று, 14 இடங்களில் வெற்றி பெற்றது. 2014 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 43.4 சதவீத வாக்குகள் பெற்று, 117 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 44.10 சதவீத வாக்குகள் பெற்று, 21 இடங்களில் போட்டியிட்டு, 20 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 19 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக தொடரும் நவீன் பட்நாயக், 2019 தேர்தல்களையும் தனித்தே சந்திக்க தயாராகி வருகிறார்..

Next Story

மேலும் செய்திகள்