"டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை" : சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி

டிக் டொக் செயலியையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை : சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி
x
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமீமுன் அன்சாரி, 
மியூசிக்கல்லி டிக் டொக் செயலி மூலமாக ஆபாசமான வீடியோக்கள் பகிரப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழி வகுப்பதாகவும் தெரிவித்தார். டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார். 

அவருக்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், டிக் டொக் செயலி மூலம் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து  புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டை மத்திய அரசின் உதவியுடன் தடை செய்தது போலவே, டிக் டொக் செயலியையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மணிகண்டன் உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்