"ஸ்டெர்லைட் விவகாரம் - வைகோ இரட்டை வேடம் போடுகிறார்" - பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ இரட்டை வேடம் போடுவதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
x
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ இரட்டை வேடம் போடுவதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் விஸ்வநாதபேரியில், முன்னாள் எம்.எல்.ஏ மனோகரனின் தந்தை அய்யாசாமி என்பவரின் மறைவை ஒட்டி, அவரது குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் முழுமையாக வெற்றி அடைவோம் என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், வைகோ இரட்டை வேடம் போடுவதாக புகார் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்