"விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மோடிக்கு மனது வரவில்லை" - ஸ்டாலின்

ஆறாயிரம் ரூபாய் கொடுப்பதால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
ஆறாயிரம் ரூபாய் கொடுப்பதால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை தனக்கன்குளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பேசிய அவர், பெரும் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மனது வரவில்லை என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரியில் இருந்து உரம் மற்றம் பூச்சுமருந்துக்கு விலக்கு அளித்தாலே அது விவசாயிகளுக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்