பாஜக கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறது - வைகோ

மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
x
அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்தை அழித்து,  ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை கொண்டுவர முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்