நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனு - அ.தி.மு.க. அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. வினர் வரும் 4ஆம் தேதி முதல் விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
x
புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. வினர். வரும் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்திற்கான கட்டண தொகை 25 ஆயிரம் ரூபாய் என்றும், 
காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அ.தி.மு.க. , அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்