பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம் - வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
x
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ தலைமையில் திரண்ட மதிமுக தொண்டர்கள் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்