"பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும்" : சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இன்னும் இடம் பெற்றிருப்பதற்கு தாம் கண்டனம் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாலகிருஷ்ண ரெட்டி பெயரை நீக்க வேண்டும் : சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை
x
3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இன்னும் படத்துடன் இடம் பெற்றிருப்பதற்கு தாம் கண்டனம் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரை சட்டமன்ற இணைய தளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21- ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்