10 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப் போராட்டம் - கி.வீரமணி
பதிவு : ஜனவரி 19, 2019, 05:01 PM
10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து  சட்டரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் தி.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று குற்றம் சாட்டினார்.   இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக சாதியின் அடிப்படையில்தான் வழங்க முடியும் என்றும் பொருளாதார அடிப்படையில் வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.