இன்றைய கூட்டம்-பாஜகவுக்கு வலுவான செய்தியை சொல்லும் - ஸ்டாலின்
கொல்கத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து தலைவர்களையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் மத்தியில் பாஜக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற வலுவான செய்தியை சொல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story