இட ஒதுக்கீடு மசோதா - அதிமுக எதிர்ப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு, அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு மசோதா - அதிமுக எதிர்ப்பு
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு, அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக மக்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய தம்பிதுரை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏற்கனவே பல திட்டங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் தான் முதன்முதலில் இடஒதுக்கீடு கொள்கை கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்த அவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தால் இந்த சட்டம் நிற்காது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். முதலில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய தம்பிதுரை, பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தினால், இடஒதுக்கீட்டிற்கான அவசியம் இருக்காது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்