மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்...

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 3 அதிமுக உறுப்பினர்கள் 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
x
நாடாளுமன்ற மக்களவையில் இன்று  3 அதிமுக உறுப்பினர்கள் 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த கட்சிக்கு மக்களவையில் மொத்தம் உள்ள 37 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்ற மக்களவையில் கடும்  அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏற்கெனவே 31 அதிமுக எம்பி.க்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் மற்றும் கே.என். ராமச்சந்திரன், கே.கோபால் ஆகிய 3 பேரை 2  நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்