" சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது" - சிதம்பரம்

ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையில், ஒரு கோயிலுக்குள் போகலாமா கூடாதா என்ற சர்ச்சை நிலவுவது சரியா தவறா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையில், ஒரு கோயிலுக்குள் போகலாமா கூடாதா என்ற சர்ச்சை நிலவுவது சரியா தவறா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது என்றார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்ற ப.சிதம்பரம், விண்கலம் அனுப்புவதும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவதும் மகிழ்ச்சிதான் என்றும், ஆனால், நாட்டில் வறுமையை ஒழிப்பதே உண்மையான வளர்ச்சி என்றார். 

Next Story

மேலும் செய்திகள்