பாஜகவுடன் அதிமுக கூட்டணியா...? - தம்பிதுரை விளக்கம்...

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
அதிமுக எம்.பிக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் அருகே அதிமுக எம்.பிக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என்றும், எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்