ஸ்டெர்லைட் விவகாரம் : "மத்திய - மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், மத்திய - மாநில அரசுகள் முறையாக ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
x
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், மத்திய - மாநில அரசுகள் முறையாக ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். கோவையில் உள்ள தனது இல்லத்தில், ஸ்டெர்லைட் ஒப்பந்த ஊழியர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய போது, டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த வேண்டுகோளை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்