தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு
x
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், 88 தொகுதிகளை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வென்று, ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது முறையாக தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று நண்பகல் 1.30 மணி அளவில் பதவியேற்றார். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு, ஆளுநர் நரசிம்மன், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்