பா.ஜ.க. தோல்வி எதிரொலி : மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. தோல்வி எதிரொலி : மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள பா.ஜ.க., 3 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தெலங்கானாவிலும், முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கு தற்போது ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.  ஆட்சியை பறி கொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த தோல்வி, பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து, பாஜக முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தை தொடர்ந்து, பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. 

டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.  இதில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, இன்று பிற்பகலில் பா.ஜ.க. மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டத்துக்கு அமித்ஷா தலைமை வகிக்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்