ம.பியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, காங். : ஆளுநருடன் கமல்நாத் சந்திப்பு

மத்திய பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
ம.பியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, காங். : ஆளுநருடன் கமல்நாத் சந்திப்பு
x
மத்திய பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். 

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.கவுக்கு 109 தொகுதிகள் கிடைத்துள்ளன. பகுஜன்சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 பேர், சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 எம்எல் ஏக்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள போதிலும், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது. போபாலில், மத்திய பிரதேசஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, கடிதம் ஒப்படைத்தார். இந்த சந்திப்பின் போது, திக்விஜய் சிங், ஜோதிராதிய்யா சிந்தியா  ஆகியோரும் உடன் இருந்தனர்.
எனவே, ஆளுநரின் அழைப்பை ஏற்று, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்