மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...

மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
x
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம்,  இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு 109 இடங்களும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் ஒரு இடத்தில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 
ஏற்கனவே, பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் பெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், தற்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 3 பேரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் ஆதரவாளர்கள். இதையடுத்து, 117 பேரின் ஆதரவோடு, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. 109 இடங்களுடன் நூலிழையில் ஆட்சியை பறிகொடுத்த பா.ஜ.க., மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்