5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்
பதிவு : டிசம்பர் 11, 2018, 05:41 PM
5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாமல்லபுரம்
சென்னை மாமல்லபுரம், கங்கை கொண்டான் மண்டபம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு அக்கட்சியினர் இனிப்புகளை வழங்கினர். 

பரமக்குடி 

பரமக்குடியில் பேருந்து நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்தனர். மேலும், பேருந்துகளில் பயணித்தவர்களுக்கும் கூடி இருந்த பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலும், காங்கிரஸ் கட்சியினர், வெடி வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, 5 மாநில தேர்தலில் முன்னிலை பெற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர்.


தொடர்புடைய செய்திகள்

பயிர் கடன்களுக்குகான வட்டி முற்றிலும் தள்ளுபடி - மத்திய அரசு பரிசீலனை

உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

155 views

காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...

ரபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய அரசு மீது உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறி, காங்கிரஸ் கட்சியை கண்டித்து, சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

178 views

பிற செய்திகள்

ஐ.ஐ.டி. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

குடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு அபாயம் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்

11 views

மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

29 views

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

111 views

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

193 views

பத்மநாபசாமி கோவிலில் இலவச தரிசன திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

406 views

"வரும் கல்வியாண்டில் 10% இடஒதுக்கீடு அமல்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.