தேர்தல் இட ஒதுக்கீடு சர்ச்சை : பாஜக கூட்டணியிலிருந்து சமதா கட்சி வெளியேற வாய்ப்பு?

நாடாளுமன்ற தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால், மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வஹா, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் இட ஒதுக்கீடு சர்ச்சை : பாஜக கூட்டணியிலிருந்து சமதா கட்சி வெளியேற வாய்ப்பு?
x
நாடாளுமன்ற தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால், மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வஹா, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க நிலையில், அவர் இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை சேர்ந்த அவர், நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில், மனிதவள மேம்பாட்டுத் துறையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அந்தக் கட்சிக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவது தொடர்பான சர்ச்சை எழுந்ததால், தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு 3 எம்பிக்கள் உள்ளனர். பாஜகவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியில் மேலும் ஒரு கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்