நாளை டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
நாளை டெல்லி செல்கிறார் ஸ்டாலின்
x
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து, காலையில் புறப்படும் ஸ்டாலின், டெல்லியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்திக்கிறார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாவிடம் வழங்குகிறார். மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து, 10ஆம் தேதியன்று, டெல்லியில் நடைபெற உள்ள பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்