ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் - தம்பிதுரை

திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் என தம்பிதுரை கூறியுள்ளார்.
x
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று திமுக நினைத்தால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை விலக்க வேண்டும்  என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பது அதிமுகவின் கொள்கை என்று கூறினார். திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகமாக உள்ளதாகவும் தம்பிதுரை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்