"ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள்" - ராமதாஸ்

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - ராமதாஸ்
x
சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை என அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை, சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்