திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணம் நிறைவேறாது - திருமாவளவன்

திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணம் நிறைவேறாது - திருமாவளவன்
x
திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன், தந்தி டி.வி-க்கு அளித்த பேட்டியில் கூறிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. துரைமுருகனின் கருத்து காயப்படுத்தி இருப்பதாக வைகோ கூறிய நிலையில், ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்