பாஜக-வின் பி-டீம் காங்கிரஸ் - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பாஜக-வின் பி-டீம் காங்கிரஸ் - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு
x
பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக கண்ணூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களை தங்கள் கட்சியினர், சபரிமலைக்கு அழைத்து செல்லவில்லை என கூறினார். கேரளாவில் பல கோயில்களை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், தற்போது சபரிமலையை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு முரணாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகவும், பாஜக-வின் 'பி டீமாக' காங்கிரஸ் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்