"தீபாவளி என்றாலே வெடியும் வெளிச்சமும் தான்" - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

அமெரிக்காவில் விருது பெற்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீபாவளி என்றாலே வெடியும் வெளிச்சமும் தான் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை
x
அமெரிக்காவில் விருது பெற்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த விழாவில், இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை பெற்றதாகவும், இதனை பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்ய கூடாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்