கே.சி.பழனிசாமி மனுவை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்

அதிமுக சட்டவிதி திருத்தத்தை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
கே.சி.பழனிசாமி மனுவை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
x
* அதிமுகவில் செய்த திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் எம்.பி.கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த  மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
* இது தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதில் தங்களால் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.  மேலும் உட்கட்சி தேர்தல் நடத்துவது தங்களின் அதிகார வரம்பிற்குள் வராது என கூறி, பழனிசாமியின் மனுக்களை இந்திய தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. கே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து கே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்துகே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து 


Next Story

மேலும் செய்திகள்