சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சென்னையில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்
x
 * 20 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாத நிலையில், தற்போது, தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும்,  
அதே நேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.  

* பல குடியிருப்புகளுக்கு   குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரையிலும் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துவரி உயர்வை 50 சதவீதம் அளவுக்கு அரசு குறைக்க வேண்டும் என்றும்,  தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும் என்றும்,  இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்