"திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு" - ஆர்.எஸ்.பாரதி வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு -  ஆர்.எஸ்.பாரதி வரவேற்பு
x
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பதவியில் நீடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தார்மீக உரிமையை இழந்து விட்டார் என்று தெரிவித்தார். முதலமைச்சர் மீது மட்டுமல்ல அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மின்துறை அமைச்சர் தங்கமணி, எல்.இ. டி பல்புகள் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்றும் ஆர்.எஸ். பாரதி சவால் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்