"காங். - திமுக கூட்டணி தொடரும்" - அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்

திமுக உடனான கூட்டணி தொடரும் என அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
காங். - திமுக கூட்டணி தொடரும் - அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்
x
திமுக உடனான கூட்டணி தொடரும் என அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சாவடி முகவர்கள் குறித்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் தலைமையில் நடந்த கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றார் தமிழகத்தில் திமுக தலைமையை ராகுல் காந்தி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாகவும் சஞ்சய்தத் தெரிவித்தார். 
 


Next Story

மேலும் செய்திகள்