மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்

முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என அமைச்சர் கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்
x
முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணைய் மற்றும் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை ஆணவத்தின் உச்சகட்டம் என வர்ணித்துள்ள மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், முக்கிய திட்டங்களை நிறைவேற்றும்போது, மக்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்