துணை வேந்தர் நியமன முறைகேடு புகார் குறித்து, ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? - அன்புமணி கேள்வி

துணை வேந்தர் நியமன முறைகேடு புகார் குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
துணை வேந்தர் நியமன முறைகேடு புகார் குறித்து, ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? - அன்புமணி கேள்வி
x
* உயர் கல்வித்துறையை ஊழல் என்ற கொடிய நோய் சிதைத்து வருவதை ஆளுநர், வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது, ஒரு ஆக்கப்பூர்வமான திருப்பம் என்று அறிக்கையொன்றில், அவர் வர்ணித் துள்ளார். 

* துணை வேந்தர் பதவி 5 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டு உள்ள டாக்டர் அன்புமணி,  தற்போது பதவியில் உள்ள 8 துணை வேந்தர்கள், தகுதி இல்லாதவர்கள் என்றும் பணம் கொடுத்து பதவியை கைப்பற்றியவர்கள் என்றும் குற்றஞ் சாட்டி உள்ளார். 

*  உயர் கல்வித்துறை ஊழல் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  உயர்கல்வித்துறை ஊழல் குறித்து, தமிழக ஆளுநர், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  டாக்டர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்