கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்

எம்.எல்.ஏ. கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
x
நெல்லை நெற்கட்டும் செவலில் நடந்த புலித்தேவன் பிறந்த நாள் விழாவில், கருணாஸ் தரப்பிற்கும், தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்த முத்தையா தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாஸை கைது செய்யாமல் இருக்க, அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நெல்லை போலீசார் சாலிகிராமத்தில் உள்ள கருணாஸை அவரது வீட்டில் சென்று தேடியதாக தகவல் பரவியதை தொடர்ந்து,  சட்ட விரோதமாக கருணாஸை கைது செய்ய முயற்சிப்பதால் அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதி இளம்திரையனிடம் கோரினர். இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர், கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி, பட்டியலிட்டபடி நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்