எம்.எல்.ஏ. கருணாசை தேடும் போலீசார்..? - மீண்டும் பரபரப்பு

எம்.எல்.ஏ கருணாஸ் வீட்டிற்குள் புகுந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை தேடியதால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
எம்.எல்.ஏ. கருணாசை தேடும் போலீசார்..? - மீண்டும் பரபரப்பு
x
முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளை விமர்சித்த‌தாக கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதை தொடர்ந்து திருவல்லிக்கேணி , நுங்கம்பாக்கம் காவல்நிலையங்களில் அவர், கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென கருணாசின் வீட்டிற்குள் 50க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து கருணாசை தேடியுள்ளனர். கருணாசின் குழந்தைகள், மனைவியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டின் அனைத்து அறைகளிலும் புகுந்து கருணாசை தேடியுள்ளனர். இதனால் கருணாசின் வீட்டில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அனைவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் கருணாஸ் இல்லை என தெரிந்த பின், வீட்டில் இருந்து வெளியேறிய போலீசார், வடபழனி காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு, புலித்தேவன் நினைவு தினத்தின்போது கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் வழக்கில் கைது செய்ய வந்திருப்பதாக கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்