மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்" - ஸ்டாலின்

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - ஸ்டாலின்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக, மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான விழா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை எனவும் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட கருணாநிதி - எம்.ஜி.ஆர். நட்பை, அரசியலாக்காமல் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டை அரசு கொண்டாட வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்